தாகி பிரபம்

இந்நூற் “றாகி பிரபம்” எனும் பெயருடைத்து. இதன் கருத்து, தாகமுடையோருக்கான நீர்ப்பந்தர் என்பதாம்.

Buy Now

குறிஞ்சிச் சுவை

எங்கணுமழகு, சுற்றிப் பார்க்குமிடனெல்லாம் சுவைதரும் எழிற் காட்சிகள். பலப்பல நிறங்களைக் காழ்ந்து மனிதனைத் தன் பக்கம் இழுக்கின்றது மகாபெரும் சத்து. பிரபஞ்சமே அதாய்த் திகழ்கின்ற தெனின் பொய்ப்படாது.

Buy Now

அப்பாஸியாக்கள்

இஸ்லாமிய ஆட்சி, அரசியல், இலக்கியம், மார்க்கச் சட்டம், அறிவியல் ,மருத்துவம், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் பொற்காலமாகத் திகழ்ந்த அப்பாஸிகளின் ஆட்சிக்கால சிறப்புக்களை சுவைபட வடித்துக் கூறும் நூல்

Buy Now

பேரின்பப் பாதை

இந்நூல் ஞானத்திற் புகுவோருக்கு முதல் நூலாயும் புகுவாயாகவும் எழுதப்பட்டது. இதனிமித்தமே அபூர்வமான மறை பொருட்கருத்துகள் இதில் எழுதப்படவில்லை. சிந்தனையைத் தூண்டும் வகையிலே இஃது எழுதப்படுள்ளது காண்க.

Buy Now

மனிதா

குருவை அறிவது எப்படி.?
கேள்வி:   ஆன்மீகத் தேடல் உள்ள ஒரு மனிதன் தன் குருவை எப்படி அடையாளம் கண்டுக் கொள்ளமுடியும்.?
பதில்:   ஓரு குருவிடம் பேசிப்பார்க்கலாம். பேசும்போது உரியமாதிரி முறையோடு பேசவேண்டும். அப்போதுதான் தான் யாரென்பதைக் காட்டிக்கொடுப்பார் அல்லாமல் அதற்கு மாற்றமாய் போய் பேசினால் பொதுவாய் ஆலிம்களுடன் பேசுவதைப் போலிருக்கும். ஆலிமுடன் பேசுவதைப்போன்று பேசி அனுப்பிவிடுவார்கள்.

Buy Now

ரிஸாலத்துல் கௌதிய்யா

இந்த ஞான நூல் முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரழியல்லாஹு அன்ஹூ அவர்கள் அறபு மொழியில் எழுதியருளியதாகும். அழகுறத்தமிழில் இதனை குத்புல் அக்தாப் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் ரழியல்லாஹு அன்ஹூ அவர்கள் மொழிபெயர்த்தருளியுள்ளார்கள்.

Buy Now

அற்புத அகில நாதர்

இஃது முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் நடந்த அனைத்து அற்புதங்களையும் பற்றி, அவர்களின் திருப்பேரர் அஷ் ஷெய்க் ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் அல் ஹாஷிமிய் மௌலானா அவர்கள் எழுதிய அழகிய கவிதைத் தொகுப்பாகும்.

Buy Now

இறையருட்பா

பிரபஞ்சமே ஓருடல். அதிற் காண்பன அதன் அங்கங்கள்.கடவுளெனத் தனித் தொருவன் நின்றனன். வானத்தில் வதிவிடங்கொண்டனன். எனின், அது இறையாக வியலாதென்க. இறை அனைத்தின் கண்ணும் நீக்கமற இடனின்றி விரவிக் கலந்தது; அதுவிதுவெனலாகாது யாங்கணும் நிறைந்தது. நானே, நாமேயெனும் அருவசூக்குமங் கொண்டது. தானே தன்னிற் றானாய் நின்று பிறிதொன்றிலதாய் விளங்குவது. உண்மையானது. உள்ளமையானது. இதனைத் தன்புத்தியிற் றெரிந்து தெளிந்தவன் உணர்ந்தனனென்க. மற்றவன் மருண்டன னென்க. வெருண்டனனென்க. வாழ்க பிரபஞ்சமாசத்து! வாழ்க வியற்கையழகெனும் எழிற் செல்வம்!! வாழ்க!!!

Buy Now

ஹகாஇகுஸ் ஸஃபா

மனிதன் மனிதாய் வாழ வேண்டுமானால் தன்னிடத்தேயுள்ள மிருகத் தன்மையை நீக்கி நல்லெண்ணத்தை உள்ளத்தில் பதியச்செய்ய வேண்டும். தானும் உள்ளமை, தன்னைச் சூழ உள்ளவைகளும் உள்ளமை என்பதை உள்ளார உணர வேண்டுமானால் அவன் தன்னை யாரென அறிந்து கொள்ள வேண்டும். அதனை விளக்க வந்த தெள்ளிய நூலே ஹகாஇகுஸ் ஸஃபா வாகும். இதைக் கற்று யாவரும் பயன்பெற வேண்டுமாறு சுருக்கியும், விளக்கியும் தெளிவுபடுத்தியும் இதனை ஈங்கண் தருகின்றோம்.

Buy Now

அவ்னிய்யா பதிப்பகம் பற்றி

இந்த இணையத்தளத்திற்கு தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இத்தளத்தில் மனித வாழ்வை செம்மைபடுத்தும் கருத்துக்களை தாங்கி நிற்கும் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட தமிழ் நூற்கள் விற்பனைக்கு உள்ளது. அவைகள் ஞான நூற்களாகவும், இலக்கிய நூற்களாகவும், கவிதை நூற்களாகவும், பிற மொழியில் உள்ள நூற்களுக்கும் விளக்கவுரையும், கருத்துரையும், மொழியாக்கம் செய்யப்பட்ட நூற்களாகவும் பரிணமித்தும் இத்தளத்தில் காட்சியளிக்கிறது. குறைந்த விலையில் விற்பனைக்கு வைத்துள்ளோம்.

வாசகர்கள் வாங்கி பயனுற்று இத்தளத்தை பற்றி பிறருக்கு அறிமுகம் செய்யவும். ஞானத்தில் தாகமுடையோருக்கும், இறைஞானத்தாகத்தை தீர்க்கும் தளமாக இது அமைந்துள்ளது இத்தளத்தின் சிறப்பு..

மேலும் படிக்க

Our Featured Sevices

Large online bookstores offer used books for sale, too. Individuals wishing to sell their used Books

  • 1.Start your campaign

    Quisque ultricies luctus amnisi non dapib us ulla efficitur loo non libe blandit, non rhons luctus

  • 2.Develop An Idea

    Quisque ultricies luctus amnisi non dapib us ulla efficitur loo non libe blandit, non rhons luctus

  • 3.Engage New Users

    Quisque ultricies luctus amnisi non dapib us ulla efficitur loo non libe blandit, non rhons luctus

  • 4.Create Your Offer

    Quisque ultricies luctus amnisi non dapib us ulla efficitur loo non libe blandit, non rhons luctus

  • 5.Save Your Time

    Quisque ultricies luctus amnisi non dapib us ulla efficitur loo non libe blandit, non rhons luctus

  • 6.printed Books Available

    Quisque ultricies luctus amnisi non dapib us ulla efficitur loo non libe blandit, non rhons luctus

பல்சுவைப் புத்தங்கள்

தமிழ் கூறும் நல்லுலகிற்கு அவ்னியா பதிப்பகத்தின் நல் வாழ்த்துக்கள்!
இத்தளம் இறைஞானம் போதிக்கும் இசுலாமிய நூலகம். புதுமுகம் தரும் புத்தகங்களின் அணிவகுப்பு.

ஞான விளக்க நூற்கள்

தாகி பிரபம்

  • 21 August 2017

இந்நூற் “றாகி பிரபம்” எனும் பெயருடைத்து. இதன் கருத்து, தாகமுடையோருக்கான நீர்ப்பந்தர் என்பதாம்.

எவருக்கு ஞானத்தில் அளவற்ற தாகம் (பிரியம்) உள்ளதோ அவருக்கிந்நூல் ஒரு நீர்ப்பந்தர் எவ்வாறு தாகத்தை நீக்குமோ, அவ்வாறே ஞான வேட்கையை இந்நூல் நீக்கிவிடும் என்பதாம் என்க.

மேலும் படிக்க
கவிதை நூற்கள்

அற்புத அகில நாதர்

  • 21 August 2017

இஃது முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை பற்றி, அவர்களின் திருப்பேரர் அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா நாயகம் அவர்கள் எழுதியருளிய அழகிய கவிதைவடிவிலான தொகுப்பாகும்.

இதில் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களை எல்லாம் அழகிய கவிதை திரட்டாக ஆசிரியர் அவர்கள் படைத்துள்ளார்கள்.

மேலும் படிக்க
தமிழ் இலக்கிய நூல்

குறிஞ்சிச் சுவை

  • 21 August 2017

எங்கணுமழகு, சுற்றிப் பார்க்குமிடனெல்லாம் சுவைதரும் எழிற் காட்சிகள். பலப்பல நிறங்களைக் காழ்ந்து மனிதனைத் தன் பக்கம் இழுக்கின்றது மகாபெரும் சத்து. பிரபஞ்சமே அதாய்த் திகழ்கின்ற தெனின் பொய்ப்படாது.

அதனுள்ளே நிகழும் படக்காட்சிகளென்ன விளங்கும் மாயா ரூபங்களைப் போற் றோன்றுவன வனைத்தும் இக்காட்சிகளே, காண்போர்க்கிது மயலாகலாம்.

மேலும் படிக்க

வெளிவர இருக்கும் நூற்கள்

What People say

சு. ஸ்ரீபால்

காவல் துறைத் தலைவர் சென்னை

எல்லாம் வல்ல இறைவனின் இறுதித் தூதுவராக இவ்வுலகத்தில் அவதரித்த நபிகள் நாயகத்தின் பிறப்பு முதல் நடைபெற்ற அற்புதங்களையும் அவர் தம் வாழ்நாளில் மனுக்குலத்திற்குச் செய்த தொண்டுகளையும் தனது பாடல்கள் மூலமாக மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இறை அருளை முழுமையாக நபிகள் அவர்கள் பெற்றிருந்த காரணத்தால் மனிதனால் நம்ப இயலாத பல அற்புதச் செயல்களை அவர் செய்து காட்டியுள்ளார். இறந்தவர்களை உயிர்பெறச் செய்துள்ளார், குருடர்களைக் காணச் செய்துள்ளார், பல்வேறு நோய்களை நொடிப்பொழுதில் சுகப்படுத்தியுள்ளார். நபிகள் நாயகத்தின் வீரச் செயல்களும், கருணை உள்ளமும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. ஆசிரியர் திரு மௌலானா அவர்களின் எளிய , இனிமையான தமிழ் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. நபிகள் நாயகத்தின் கருணை உள்ளத்தை எடுத்தியம்பவந்த மௌலானா அவர்கள் கீழ்க்கண்ட பாடலின் மூலம் உலகத்தின் இருளை நீக்க வந்த பேரொளிதான் அன்பு நாதராகிய அகமது ஸல்லல்லாஹு லைஹிவஸல்லம் என்று நயம்பட எடுத்துக்கூறியுள்ளார். "கருணை யுள்ளம் படைத்தவர் அருளை வார்ந்த ளிப்பவர் இருளை நீக்கி யொளியினை இகத்த வர்க்கு மீந்தவர்” இது போன்ற பல இனிய பாடல்கள் கருத்துப் பெட்டகங்களாக அமைந்துள்ளன. இறைமக்கள் எம்மதத்தவராயினும் அவர்கள் இவ்வுலகில் தீமை என்னும் இருளை நீக்க வந்த அருட்பெரும் ஜோதிகள் என்பதை உணர்ந்து அவர்தம் வழிகளை, போதனைகளைப் பின்பற்ற இது போன்ற நூல்கள் மக்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். இஸ்லாமியர்களும், இஸ்லாமியர் அல்லாதவர்களும் படித்து நபிகள் நாயகத்தின் பெருமைகளை அறிந்து கொள்ளும் நல்வாய்ப்பினை இந்நூல் வாயிலாக ஆசிரியர் அவர்கள் வழங்கியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள்

கலைமாமணி முனைவர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன்

பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர்

அருட் செல்வம் செல்வத்துட் செல்வம்' என்ற திருவள்ளுவப் பெருந்தகையின் அமுத மொழிக் கிணங்க, அருட் செல்வமாகத் திகழ்ந்து இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும் மெய்யடியார்களின் உள்ளம் நிறைந்த அருளாளராகத் திகழ்பவர் ஜே.எஸ். கே.ஏ.ஏ.எச். மௌலானா பெருந்தவ ஞானியர் ஆவார். இப்பெருந்தவ ஞானியரின் நட்பாம் தோழமைக்கு வித்தூன்றியவர் என் அருமை நண்பர் திருமலி இமாம் அவர்கள், 'பற்றுக பற்றற்றான் பற்றினை' என்ற என் இறைவழி வாழ்வுப்பாதையில் தவ மாமணியாகத் திகழும் மௌலானா அருளாளரின் சந்திப்பு வேரூன்றி வரும் வேளையில் அற்புத அகில நாதர்' என்ற அவர் தம் கவிதைக் காவியத்தைப்படிக்கும் பேறுபெற்றேன். உலக நபிமார்களிலேயே உன்னத மாநபியாகத் திகழும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஓங்கிய வாழ்வுப்பாதைகளின் வாழ்வு வரலாற்று நிகழ்வுகளை எல்லாம் கட்டுக் கோப்பான யாப்பினுள் திட்டமிட்ட அளவோடு சீரிய - கூரிய - 'வீரியமான கருத்துக் கொழிப்புடன் இந்நூலை யாத்துள்ளார்கள். அற்புத அகில நாதர் என்ற இந்த நூலிலுள்ள 132 பாடல்களும் படித்து இன்புற்று நாயகப் பேரொளியில் வாழ்வுப்பாதையில் நாம் செல்லுவதற்கான ஒரு கைவிளக்காக உள்ளது. இந்த கை விளக்கு அணையாத வரம்பெற்ற விளக்காக நம் மௌலானா அவர்கள் ஆக்கித் தந்துள்ளனர். இந்தக் கைவிளக்கைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டவர்கள் கலங்கரை விளக்கத்தையும் காண்பார்கள் என்பது உறுதியிலும் உறுதி. வாழ்க மௌலானா! ஓங்குக அவர் தம் புகழ்! வளர்க நல்லிணக்க அன்பு!

கவிஞர் மௌலவி எஸ். ஹுஸைன் முஹம்மத் ஆலிம் (மன்பா)

ஜவ்வாது புலவர் பரம்பரையில் வந்த கவிஞர்

இதுவரை பிறந்த மனிதர்களில் இனியும் வரப்போ கின்றவரில் புதுமை நபியைப் போலொருவர் பூமியில் இல்லை இனியுமில்லை அதிசய நபிகள் வாழ்க்கையில் அனைத்தும் அற்புதம் நாயகத்தைத் துதித்தால் நாவோ பரிமளிக்கும் சுவர்க்கம் வாயில் குடியிருக்கும். அகில அற்புத நாதரென அண்ண லவர்கள் திருப்புகழை அஹ்ல பைத்தாய் அவர்களது அரிய வழியில் தோன்றியவெம் மகிமைக்குரிய குருநாதர் மாண்புடன் பாடிக் களித்தார்கள் புகழுக் குரிய இந்நூலைப் போலும் எவர்தாம் செயவியலும். நாயகர் பன்னிரு பாடலெனும் நயமிகு நூலைத் தமிழுக்கு வாய்த்த புதிய பிரபந்த வகையாம் என்றே சான்றோர்கள் ஆய்ந்து புகழும் வகையினிலே ஆக்கியளித்த பெரும் மேதை தூய தமிழே இவர்களெனத் தோன்றிய தென்றால் மிகையாமோ. கொஞ்சும் தமிழை இதிற்கண்டோம் குலவும் சந்தம் இதிற்கண்டோம் அஞ்சா நபிகள் நிகழ்த்திநின்ற அற்புத மனைத்தும் இதிற்கண்டோம் நெஞ்சம் ஒன்று நபியன்பால் நிறைந்து கசிந்த நிலைகண்டோம் தஞ்ச நபியின் அகமியங்கள் தவழும் அழகை இதிற் கண்டோம். எம்மைப் போன்ற மனிதரென ஏந்தல் நபியை நினைப்போரே அம்மை நோய்போல் பரவிவிட்ட அய்யா முல்ஜா ஹிலியத்திதில் உம்மி நபியின் உண்மைகளை உயிர்பெறப் பாடிடு மிந்நூலோ இம்மை இருக்கும் வரை யிருக்கும் இறவாப் புகழுடன் நிலைத்திடுமே .

Moulavi S.H. Fowzuraheem (Najahi)

Moulavi- Beruwala - Galewela

தாங்களால் வெளியிடப்பட்ட மருள் நீக்கிய மாநபி என்னும் புத்தகத்தைப்பார்வையிட்டு மகிழ்ச்சியடைந்தேன். அறிவீனர்களான வழிகெட்ட வஹ்ஹாபியர்களின் கொள்கையை எதிர்த்துத் தக்க ஆதாரத்துடன் உங்கள் நூல் அமைந்துள்ளது, தற்காலத்தில் இது போன்ற நூல்கள் அவசியம் மக்களுக்குத் தேவைப் படுகின்றன. ஸுன்னத்வல் ஜமாஅத் கொள்கைக்கு மாற்றமாக எழுதியும் பேசியும் திரியக்கூடிய மூடர்களுக்கு ஷைத்தான்களுக்கு உங்களுடைய புத்தகம் சிறந்த மறுப்பாகும்

M.T.M. Mathloob

Dehiwala

தாங்கள் அனுப்பிய மருள் நீக்கிய மாநபி வெளியீடு 4 கிடைத்தது. மிக்க நன்றி. தங்களின் முன்னுரை - அறிவுரைகளைக் கண்ணுற்றேன். இந்த அறிவுரையும் முன்னுரையும் இந்நூலும் வஹ்ஹாபிகளுக்கு ஓர் அணுகுண்டு.

M.S.Aliyar Thamby

Kantale

ஜமாலியா ஸய்யித் கலீல் அவன் அல்ஹாஷிமிய் மௌலானா அவர்கள் எழுதிய 'மருள் நீக்கிய மாநபி ' எனும் சிறப்பு நூலை நான் பார்த்தேன். நான் முன்னர் வஹ்ஹாபிய்யா எனும் ஜமாஅத்தில் என்னுடைய பணம் உடல், உயிர், குடும்பம் அனைத்தையும் அர்ப்பணித்தேன். இப்பாசமுள்ள நூலை என்னுடைய கரத்தில் நல்லெண்ணங் கொண்டவனாக எடுத்துப் பார்த்தேன், அல்லாஹ் என்னுடைய இச்சிறு உள்ளத்தை மாற்றி விட்டான்.

Mohamed Saleem

Matale

தங்களின் மருள் நீக்கிய மாநபி என்ற புத்தகத்தை அன்பர் ஒருவரிடம் இருந்து எடுத்துப் பார்த்தபோது அதில் உள்ள உங்கள் முத்துக்களான கருத்துக்கள் என் உள்ளத்தைத் துளைத்து என் சிந்தைக்குப்பல விருந்தளித்தது. ஆகவே, அறிமுகம் இல்லாவிடினும் முகவரியுடன் சந்திக்கிறேன். வஹ்ஹாபி என்னும் விஷக்கிருமிகளால் அமாவாசைகாணாது அவ்விஷக்கிருமிகளுக்கு விஷ மூட்டும் உங்கள் மருள் நீக்கிய மாநபி என்ற புத்தகத்தைக் கட்டாயம் தயவு செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தயவாய் வேண்டிவிடை பெறுகிறேன்.

அ. ஸ. அப்துஸ் ஸமத் பீ. ஏ, (சிறப்பு)

அட்டாளைச்சேனைப் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராக கடமை புரிந்த முதுபெரும் எழுத்தாளர் அ. ஸ. அப்துஸ் ஸமத் பீ. ஏ, (சிறப்பு) அவர்கள்

ஈழவள நாட்டிற் பயிர் பெருக்க வாரீர் எனும் நூலுக்கு நாளிதழில் எழுதிய விமர்சனம். நோயுடை யேழை யோரை நோக்குதற் கேகுவார்கள் போயுடன் மீளுவார்கள் புரையிலினார் சனாஸா தீயுடைப் பசியில் வாடும் தீனிலா வேழை தம்மை கோயின் மையி னேற்கும் கொள்கையி றூத ரன்றே. பெருமானாருடைய இந்த அருள் சுரக்கும் இனிய குணங்களை எளிய இனிய தமிழினில் அழகுறக்கூறி நிற்கும் இப்பாடல் கவிஞர் மௌலவி ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா அவர்களால் இயற்றப்பட்ட நாயகர் பன்னிரு பாடல் என்ற நூலில் காணப்படுகிறது. மௌலானா அவர்கள் தென்னிலங்கையில் அறபு வித்தியாதரிசியாகக் கடமையாற்றுகிறார். இயல்பாக வரப்பெற்ற தமிழறிவும், கவித்துவப் புலமையும் அவரை ஒரு நல்ல கவிஞராகக் காட்டி நிற்கின்றன. இவர் மரபு நெறி பேணும் கவிஞர். யாப்பு அணி இலக்கணங்களில் நன்கு தேர்ந்தவர். அமைதியாக இருந்து அழகு தமிழ்ப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அறபு தமிழ் அகராதியை இயற்றிய ஹள்ரத் யாஸீன் மௌலானா அவர்கள் பிறந்த வெலிகமயில் தான் இந்தத் தீந்தமிழ்க் கவிஞரும் பிறந்தார். இவரது குடும்பத்தில் பலரும் கவித்துவப் புலமை பெற்றவர்களாவர். 27.10.67 இல் இலங்கை சாகித்திய மண்டலத்தினர் கொழும்பு றோயல் கல்லூரியில் ஒரு கவியரங்கை நடாத்தினர். நாவாலியூர் சோ. நடராசா தலைமையில் நடைபெற்ற இக்கவியரங்கில் புலவர்மணி ஆ.மு. ஷரீபுத்தீன், பா. சத்திய சீலன் போன்ற சிறந்த கவிஞர்கள் பங்கு பற்றினர். இக்கவியரங்கில் ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா இவர்கள் யாத்துப் பாடிய ஈழவள நாட்டில் பயிர் பெருக்க வாரீர் என்ற கவிதைக் கோவையை திண்டுக்கல் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை ஒரு சிறு நூலாக வெளியிட்டுள்ளது. நம் நாட்டுப் படைப்பிலக்கியங்களில் இலங்கைத் தேசியப் பாங்கும் பண்பாடும் மிக அருகியே காணப்படும். இக்குறையைப் போக்க இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1956 இல் தேசிய இலக்கியம் என்னும் கோட்பாட்டை முன்வைத்தது. அதன் பிறகு சிறுகதை, நாவல்களில் இது ஓரளவு பிரதிபலிக்கப்பட்டதானாலும் கவிதைகளில் தேசியத் தன்மையின் எதிரொலிப்புப் போதிய அளவு இல்லை. இக்கவிதைத் தொகுப்பில் இதன் ஆசிரியர் ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா இக்குறையை பெருமளவு தீர்த்து வைத்துள்ளமை இந்நூலின் சிறப்பம்சமாகும்.

அ.நட. செயச்சந்திரன் B.Sc., A.M.I.E.R.E.(LOND).,C.A., I.C.W.A., M.B.A

(ஞானவெட்டியான்)

'தாகி பிரபம்' இவ்வறிய கருவூலத்தைப் பற்றி சகோதரர் எனக்குத் தனிமின்னஞ்சலில் முன்னர் எழுதியுள்ளார். அவர் எனக்கு அனுப்பியிருப்பதாகச்சொல்லப்படும் நூல் என் கைக்குக் கிடைப்பதற்கு முன்னரே அந்நூல், எனக்குஅறிவூட்ட, என்னைத் தேடி வந்தது இறையாணையோ? என் கொடுப்பினையோ? அறியேன். இவ்வரிய நூலைப்பற்றி சகோதரர் என் கருத்துக்களையும் கேட்டிருந்தார். ஆனால், படிக்கும்பொழுது, ஒவ்வொரு சொல்லும் சொல்லும்கருத்துக்களும், மனுவுக்கும் ஆண்டவனுக்கும் உள்ள உறவைப் பற்றியும்,எப்படி இருந்தோம்? எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கப் போகிறோம்?என்னும் வினாக்களுக்கு விடைகளும் பொதிந்து கிடக்கும் இந்நூலுக்குக்கருத்துக் கூற எனக்கு அருகதையுள்ளதா? என எண்ணிப் பார்த்தேன். அப்படியே கூறினும் அது: “பாம்பைப் பார்த்து மண்புழுதானும் ஆடமுயன்றது”போல்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

Read It In All Devices

Large online bookstores offer used books for sale, too. Individuals wishing to sell their used Books

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit aesent accumsan sit amet risus sed auctor.

Aenean ultricies iaculis cursus. Mauris enim tellus, finibus in felis sollicitu din iaculis dolor. Donec sollicitudin orci id efficitur dapibus. Aliq uamtem por ien sed condimentum fringilla. In magna elit, ultrices a eros it amet, iaculis hendrerit tellusn iaculis nisi, nec maximus lorem.

Nam ut egestas nibh. Phasellus sollicitudin tempus neque quis gravida. Aenean a eros at ex pharetra suscipit.

Download on the
App Store
GET IT ON
GooglePlay

விளம்பரங்கள்