துஹ்பத்துல் முர்ஸலா
₹.80.00இந்நூல் ஆத்மார்த்த அறிவில் (தஸவ்வுபில்) மிகச் சிறப்புக்குரியது. பள்ளிக் கூடங்களில் படிப்பதற்கு இன்றியமையாத தென்பதாலும் ஆத்துமார்த்த இன்பத்தில் திளைத்த நம் ஞானப் பிள்ளைகள் விரிவுரை கேட்டுக் கொண்டதற்கமையவும் இந்நூலிற்கு மொழி பெயர்ப்பும் விரிவுரையும் அடைத்துள்ளோம்.
Book Description
இந்நூல் ஆத்மார்த்த அறிவில் (தஸவ்வுபில்) மிகச் சிறப்புக்குரியது. பள்ளிக் கூடங்களில் படிப்பதற்கு இன்றியமையாத தென்பதாலும் ஆத்துமார்த்த இன்பத்தில் திளைத்த நம் ஞானப் பிள்ளைகள் விரிவுரை கேட்டுக் கொண்டதற்கமையவும் இந்நூலிற்கு மொழி பெயர்ப்பும் விரிவுரையும் அடைத்துள்ளோம். அறபுச் சொல்லுக்கு எவ்வவிடத்தும் ஒரே கருத்தையே அமைத்துள்ளோம். அதனாற் சொன்மயக்கமமைவது நீக்கப்படுமென்க. யாவரும் கற்க வேண்டும் என்பதனை மனக்கண்கொண்டு இலகு தமிழை உபயோகித்தோம். இந்நூல் ஆத்ம வேட்கை கொண்டோருக்கேயன்றி சித்தசேட்டை கொண்டோருக்கன்றெனவறிக. இன்நன்நூலின் உள்ள சில ஞான கருத்துக்கள்` வுஹூதாகிய உள்ளமைக்கு உருவம் என்பதோ (இதுவரைதான்) என்கின்ற எல்லையோ (இடம், காலங்களிலே இவ்வளவுதான் என்கிற) மட்டோ இருக்கவில்லை. (இதுவே தன்ஸீஹ் எனக் கூறப்படும். இஃது ஒழிந்தது அல்லது தூய்மையானது அல்லது அரு எனப் பொருள்படும். இது ஹக்காகவிருந்தது.) (இஃது இவ்வாறு இருக்கையிலே) இஃதுடனே (இது தன்னிலிருந்தே, இதுவே) உருவம், எல்லை என்பவைகள் கொண்டு(ம், பெயர்கள் கொண்டும் பண்புகள் அல்லது வருணனைகள் கொண்டும்) வெளியாகித் தோன்றிற்று. (இதுவே தஷ்பீஹ் எனக் கூறப்படும். இஃது ஒப்பானது அல்லது உரு எனப் பொருள்படுவது) (எல்லை, மட்டுகற்ற பிரபஞ்சத்தில் சிருட்டிப் பொருள்கள் வெளியான போதும்) உருவம் எல்லைகளற்ற முன்னிருந்த வுஹூதின் நிலை பேதப்படவில்லை. மேலும் அது இப்பொழுது, (முதலில்) எப்படியிருந்ததோ அப்படியேயிருக்கிறது. (எனவே உருவெடுத்து வெளித்தோன்றிய இந்தப் பிரபஞ்சங்களும் சிருட்டிப் பொருள்களும் வுஹூதிலே அருவமாகக் கலந்து நிறைந்து மறைந்திருந்த போது தத்தம் உள்ளமைகளை அறிந்திருந்தன. தாம் உருவமெடுத்தபோது தத்தம் உள்ளமைகளை அவைகள் மறந்து விட்டன. அவ்வாறு தம்மைத் தாம் மறந்த ஒரு பகுதி தம்மை அதிலிருந்து வேறுபட்டவை எனக் கருதி தன்ஸீஹை மட்டுமே ஹக்கு என்கின்றன. மற்றொரு பகுதி தஷ்பீஹை மட்டுமே ஹக்கு என்கின்றன. என்னே மடமை! என்னே தம் இழிநிலைமை!! என்னே கொடுமை!!!) (ஞானக் கடலான குத்புகள் பெருமான் அஷ்ஷெய்கு முஹிய்யுத்தீன் இப்னு அறபிய் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் தன்ஸீஹ், தஷ்பீஹைப் பற்றிக் கீழ்வருமாறு பாடியுள்ளார்கள். தன்ஸீஹை (மட்டுமே ஹக்கென்று) நீர் சொன்னீரானால், நீர் (அதைக் கொண்டு மட்டுமே) தளையிடப்பட்டவராகுவீர். (அதாவது ஓர் எல்லைக்குட்பட்டவராகுவீர்) தஷ்பீஹை (மட்டுமே ஹக்கென்று) நீர் சொன்னீரானால், நீர் (அதைக் கொண்டு மட்டுமே) எல்லையிடப்பட்டவராகுவீர். (அதாவது ஓர் எல்லைக்குட்பட்டவராகுவீர்) (தன்ஸீஹ், தஷ்பீஹாகிய) இரண்டையும் (ஒன்றாக்கி அதை ஹக்கென்று) நீர் சொன்னீரானால், நீர் நேர்மையானவரானீர். மெய்ஞ்ஞான அறிவிலே நீர் நாயகரானீர்; தலைவருமானீர். தன்ஸீஹையும், தஷ்பீஹையும் தனித்தனியாகப் பிரித்து இரட்டையை (ஹக்கென்று) சொன்னானே அவன் முஷ்ரிக்காகிவிட்டான். (இணை வைக்கிறவனானான்.)
Book Detail
இந்நூற் “றாகி பிரபம்” எனும் பெயருடைத்து. இதன் கருத்து, தாகமுடையோருக்கான நீர்ப்பந்தர் என்பதாம்.
-
Book Title
துஹ்பத்துல் முர்ஸலா
-
Author
JSKAAH Mowlana
-
Book Type
-
Date Published
December 13, 2017
-
Specification
Spritual
-
Chapters & Pages
12 Chapters And 150 Pages
Sarena Doe
Nam ut egestas nibh. Phasellus sollicitudin tempus neque quis gravida. Aenean a eros at ex pharetra suscipit. Proin iaculis ipsum ac ullamcorper pretium. Morbi ut leo eu felis commodo porta.
Sarena Doe
Donec ullamcorper vulputate quam pharetra tempus. Nam mi eros, porta vitae tempus sit amet, blandit non elit. Cras aliquet massa non quam molestie facilisis. Duis sollicitudin mattis ante, sed suscipit mi blandit et.
Sarena Doe
Donec sed viverra ligula, ut mollis libero. Vivamus imperdiet elementum massa vitae tempor. Suspendisse vel sem id libero ullamcorper sollicitudin. Nunc ut dictum nibh.